Wednesday, March 21, 2007

நடுநிலையாளர்களின் சிந்தனைக்கு

எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோதர நெஞ்சங்களே!
நடுநிலை சிந்தனையாளர்கள் தவறான செய்திகளால் ஏமாற்றபட்டு விட கூடாது என்ற எண்ணத்தால் உருவானதே இந்த பதிவு.

இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலர் இஸ்லாத்தைப் பற்றி உண்மைக்கு புறம்பாக, தவறான செய்திகளை பரப்புவதற்கு வலைபதிவுகளில் வலம் வருவதை காணுகிறோம். இந்த குழப்பவாதிகள் தங்களை பற்றி மக்களிடத்தில் கூறும் போது, இஸ்லாமிய கொள்கைகளின், போதனைகளின் அடிப்படைகளான திருக்குர்ஆனையும், இறைத்தூதர் முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களின் பொன் மொழிகளான ஹதீஸ்களையும் கரைத்து குடித்ததோடு அதை ஆராய்ச்சி செய்த அறிவாளிகளாகவும் தங்களை பற்றி பறைசாட்டுவார்கள். அவர்கள் ஓரளவு படித்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதை இவர்கள் படித்ததே, இஸ்லாத்தை பற்றிய தவறுகளை கண்டு பிடித்து இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்னும் ஒற்றை கொள்கைக்காகவேயாகும். ஆனால் அவர்களால் இவ்விரண்டிலும் அணுவளவும் கூட குறைகளை காணமுடியாததினால் ஏற்பட்ட தோல்வியின் விளைவாக, இவர்கள் இஸ்லாத்தை பற்றி அவதூறுகளை பரப்ப நேர்மையற்ற, அநாகரீகமான முறையை கையாளுகிறார்கள். அவைகள் என்னவென்றால்

1) முஸ்லிம்கள் செய்யும் தவறுகளை, இஸ்லாமிய போதனைகளாக, நெறியகளாக காட்ட முயற்சி செய்வது.

2) பொய்யான தகவல்களையோ அல்லது தகவல்களை திரித்தோ, இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி செய்வது.

3) முஸ்லிம்கள் தங்களின் உயிரினும் மேலாக கருதும் இறைத்தூதர் முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் மீது அநாகரீகமான பொய்யான குற்றசாட்டுகளை கூறி, முஸ்லிம்களின் மனங்களை புண்படுத்தி உணர்வுகளை தூண்டிவிட்டு அதனால் வெளிபடுத்தபடும் முஸ்லிம்களின் உணர்வுகளை சுட்டிகாட்டி இஸ்லாம் மதவெறியை ஊட்டும் மார்க்கமாக சித்தரிப்பது.
4) கிலோ 2 ரூபாய் ரேசன் அரிசியின் தரம் குறைந்து விட்டதாக விவாதம் நடத்தினால், அதிலும் கூட இஸ்லாத்தை பற்றியும், இறைத் தூதர் பற்றியும் அவதூறான அநாகரீகமான செய்திகளை பதிவிடாமல் விடுவதில்லை. பேசும் தலைப்புக்கும், இஸ்லாத்திற்கும் அணுவளவு கூட சம்பந்தம் இருக்காது. அதிலும் இஸ்லாத்தை பற்றியும், உத்தம திருநபியவர்களையும் தேவைக்கில்லாமல் அநாகரீகமாக விமர்சிக்க தவறியதில்லை.

நான் மேலே கோடிட்டுள்ள அனைத்தும் தினசரி நாம் வலைபதிவில் கண்டு வருகிறோம் என்பதனை நடுநிலை சிந்தனையார்கள் நன்கறிவார்கள்.

எனவே இந்த அநாகரீக, சரித்திர மோசடி குழப்பவாதி கும்பல்களை அவர்களின் நேர்மையற்ற விமர்சனங்களிலிருந்தே எடுத்துக் காட்டுவதன் மூலம், வலைபதிவு வாசக சகோதர சகோதரிகளில் நடுநிலையான நன்மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் தான் இதை பதிவிடுகிறேனே அன்றி இவர்கள் மீது தனிப்பட்ட வெறுப்போ அல்லது காழ்ப்புணர்வோ எனக்கு அணுஅளவுமில்லை என்பதை இறைவனை சாட்சியாக முன் வைத்து எனது பதிவை முன் வைக்கிறேன்.

முதல் குற்றச்சாட்டு
முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு

1) இறைத் தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் ஏகத்துவத்தை மக்கத்து மக்களிடம் முன் வைத்தவுடன், அம்மக்கள் இப்பிரச்சாரத்தை கைவிடக்கோரி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதில் ஒன்று தான் "முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் விரும்பினால் அழகிய பெண்களை தருவதாகவும், அதற்கு பகரமாக ஏகத்துவ பிரச்சாரத்தை கைவிட வேண்டும்" என கூறிய ஆசை வார்த்தைகள். இஸ்லாத்தை முழுமையாக படித்தவராக இருக்கும் பட்சத்தில், இந்த சரித்திரத்தையும் தெரிந்தே இருக்க வேண்டும். ஒரு நடுநிலை சிந்தனையுடைய மனிதனதாக இவர்கள் இருந்திருந்தால், இவர்களும் அறிந்திருக்கும் மேலே கூறியவுள்ள தகவல் எப்படி முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூற உங்களுக்கு இடமளித்திருக்க முடியும்?

2) இஸ்லாம் மார்க்கம் மட்டுமே ஆண்களும் பெண்களும் கட்டுபாடற்ற முறையில் கலந்திருப்பதை தடை செய்கிறது. இஸ்லாம் மார்க்கம் மட்டுமே காம உணர்வை தூண்டும் வகையில் உடையணிவதை தடுத்து, கண்ணியமாக உடை அணிய வலியுத்தும் ஒரே மார்க்கமாக திகழ்கிறது. (கண்ணியமாக உடையணிய சொன்ன ஒரே நன்மைக்காக, இஸ்லாம் சுதந்திரத்தை பறிப்பதாகவும், அடிமைபடுத்துவதாகவும் காம களியாட்டத்தை விரும்பும் கயமை உள்ளம் படைத்தவர்கள் கூறுகிறார்கள்). இஸ்லாம் மார்க்கம் மட்டுமே விபச்சாரத்திற்கும், பாலியல் பலாத்காரத்திறகும் கல்லெறிந்து கொல்லப்படுதல் வேண்டும் என்னும் கடுமையான குற்றவியல் சட்டத்தை இவ்வுலகில் பிரகடனப்படுத்திய ஒரே மார்க்கமாகும். (சமுதாயம் சீர்கெடுவதிலிருந்து பாதுகாக்கவும், பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கவும் கடுமையான குற்றவியல் சட்டங்களை பிரகடனப்படுத்தி, செயல்படுத்துவதனால், இஸ்லாத்தை காட்டுமிராண்டி மார்க்கமாக காம களியாட்டங்களை விரும்புவோர்கள் கூறுகிறார்கள்). காமக் களியாட்டங்களில் நாட்டமுடைய ஒருவராக முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) இருந்திருந்தால், தான் விரும்பும் இன்பங்களை தடை செய்யும் சட்டங்களையும், அவ்வாறு செய்பவருக்கு கொடுமையான தண்டனையையும் எப்படி செயல்படுத்த முன் வர முடியும்? ஒரு நடுநிலை சிந்தனையுடைய மனிதனதாக நீங்கள் இருந்திருந்தால், தாங்களும் அறிந்திருக்கும் மேலே கூறியவுள்ள தகவல்கள் எப்படி முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூற உங்களுக்கு இடமளித்திருக்க முடியும்?

3) இறைத் தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களின் மனைவியர்களில், அன்னை ஆயிஷா (இறைவன் அவர்களை பொறுந்தி கொள்வானாக!) அவர்கள் மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைத்து மனைவியர்களும் ஏற்கனவே மணமுடித்திருந்தவர்கள் ஆவர். பாலியல் வெறியுடையவராக இருந்திருந்தால், எப்படி ஏற்கனவே மணமுடித்த பெண்களையே திருமணம் செய்திருக்க முடியும்? ஒரு நடுநிலை சிந்தனையுடைய மனிதனதாக நீங்கள் இருந்திருந்தால், தாங்களும் அறிந்திருக்கும் மேலே கூறியவுள்ள தகவல்கள் எப்படி முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூற உங்களுக்கு இடமளித்திருக்க முடியும்?

மேற் சொன்ன ஓரிரு உதாரணங்களே, இஸ்லாத்தை கண்மூடித்தனமாக வெறுக்கும் இவர்கள், உத்தம நபியின் ஓழுக்கத்தை பற்றி கேவலமாக சித்தரிக்க வைக்கும் அவர்களின் வாதத்தில் நேர்மையற்றவர்கள் என்பது நடுநிலை சிந்தனையாளாகளுக்கு புலனாகும்.

இறைவன் நாடினால் மற்றொரு பொய்யான குற்றசாட்டையும், அதன் உண்மை நிலையென்ன? என்பதை பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

4 comments:

Anonymous said...

உஙகல் என்னங்கலும் அதன் வெலிபாடுகலும் அருமை. இது பிரருக்கு புரிகிரதோ இல்லையோ, நம் சகோதரர்கல் நம் மார்க்கத்தை விலங்கிக் கொல்ல உதவு என நம்புகிரென்.
Expecting more article from your side.
Please excuse me for the spelling mistakes.

Naina said...

எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோதரரே!
இறைவன் நாடினால், இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் தவறான குற்றசாட்டுகளின் உண்மை நிலையை நடுநிலை சிந்தனையாளர்கள் அறிந்து கொள்ள எனக்கு தெரிந்த தகவல்களை பரிமாறி கொள்வேன். எல்லாப் புகழுக்கும் தகுதியானவன் இறைவன் ஒருவனே. உங்களுடைய வருகைக்கும், பதிவை படித்தமைக்கும் நன்றி.
அன்பு சகோதரன்
நெய்னா முஹம்மது

Anonymous said...

இறைவனின் சாந்தி நிலவட்டுமாக...
சகோதரரே.. தங்களின் கருத்துக்களை படித்தேன். அநாகரிகமான வக்கிரமான குற்றச்சாட்டுக்களுக்கு கண்ணியமான உங்கள் பதில் மிகவும் அருமை. இஸ்லாத்திற்க்கு எதிரான இனையத்தளங்களிருந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை எடுத்து வெளியிடுவதன் மூலம் தங்களின் மன அரிப்பை சொறிந்துக்கொள்கின்றனர்.வரலாற்றைத்திரித்து காந்தியைக் கொன்றதைக் கூட மறைக்கப் பார்க்கும் கரைப்படிந்த மனங்கள் இஸ்லாத்தின் ஜோதியை வாயால் ஊதி அணைக்கப்பார்ப்பது வியப்பல்ல. மனிதருள் புனிதராம் திருநபியின் வாழ்வை ஆராய தகுதியற்ற நேர்மையற்ற வக்கிரப்பார்வைக் கொண்ட இவர்களால் இயலாது.



உதயன்

Naina said...

எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்
அன்பு சகோதரர் உதயன் அவர்களே!
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. எந்த கருத்தை படிக்கும் போதும், அது நமக்கு சாதகமானதோ அல்லது பாதகமானதோ, நடுநிலை சிந்தனையுடன் படித்தால் மட்டுமே அந்த கருத்திலிருக்கும் உண்மையை நம்மால் உணர முடியும். அவ்வாறு கருத்துக்களை படிக்காத வரையில், நஷ்டம் படிப்பவருக்கே அன்றி கருத்துக்களுக்கு இல்லை. இது தான் எனது அளவு கோல்.
நன்றியும், வாழ்த்துக்களுடன்
அன்பு சகோதரன்
நேய்னா முஹம்மது