ஏக இறையோனின் திருப் பெயரால் துவங்குகிறேன்.
அன்பு தமிழ் பேசும் சகோதர நெஞ்சங்களே
இறைவன் சாந்தி நம் அனைவர்கள் மீதும் நிலவட்டுமாக!
நான் நம் சகோதரர்களிடையே விவாதங்களின் போது மிக அநாகரீக முறையில் ஒருவருர் மற்றவரை சாடும் நிலை பார்த்து வேதனைப் படுகிறேன். பிறரின் எந்த வார்த்தைகள், எனது மனதை வருந்தச் செய்யுமே, அதே என்னுடைய வார்த்தைகள், பிறரின் மனதை நோகச் செய்யும் என்னும் விழிப்புணர்வு நம்மில் வந்து விட்டாலே, நாம் ஆரோக்கியமான, முன்னேற்றம் தரும் விவாதங்களை செய்யலாம்.
கருத்து சுதந்திரம் நாகரீகத்தின் வெளிப்பாடே. ஆனால் சுயமரியாதை உயிராகும். எனவே கருத்து சுதந்திரம் என்பது பிறருடைய சுயமரியாதை சிதைத்திடுமானால், அந்த கருத்து சுதந்திரம் தேவையில்லை என்பதே எனது நிலையாகும். கருத்து சுதந்திரம் மக்களுக்கு அறிவொளியூட்டும். ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரால் பொய்யான செய்திகளை மக்களிடையே பரப்புவது, சமுதாயத்தில் ஏற்படுத்தும் குழப்பமாகும். குழப்பம் செய்வது கொலையை விட கொடிய செயலாகும்.
எனவே கட்டுப்பாடான கருத்து சுதந்திரமே சமுதாய நலனுக்கு சிறந்தது என்பது எனது கருத்தாகும். இது குறித்து பிற சகோதரர்களின் கருத்தென்ன? அறியலாமா?
நன்றியும் வாழ்த்துக்களும்.
சகோதரன் நெய்னா முஹம்மது
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
When you call for good things, you won't find people response. At the same time, if to curse each other or to fight with each other by this time you would have seen feedback flooded out.
Any how good steps taken by you, naina
ஐயா.
உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது உங்கள் மீது மரியாதை ஏற்படுகிறது. அதனால் உங்களுக்கு எழுதுகிறேன். அரவிந்தனுக்கு எழுதியிருந்தீர்கள். படித்தேன்.
ஆர் எஸ் எஸ் காரர்களோ ஆர் எஸ் எஸ் ஸோ எப்போதும் இஸ்லாத்தின் மீதோ இஸ்லாமியர்கள் மீதோ வெறுப்பை உமிழ்வதில்லை. அப்படி செய்தால் அவர்கள் சுயம் சேவகர்களே அல்ல. ஆனால் நடப்புகளை விமர்சிக்கும்போது வார்த்தைகளில் விசம் ஏற்றிவிடுகிறார்கள்.
இன்று நீங்கள் வேறு மதத்திலிருந்தாலும் உங்களுடைய தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு............ தாத்தாவும் உங்களூரிலிருக்கும் ஹிந்துவினுடைய தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு ................ தாத்தாவும் ஒரு காலத்தில் சகோதரர்கள்.உங்கள் ரத்தமும் எங்கள் ரத்தமும் ஒன்று. இன்றும் நாம் சகோதரர்கள்.
ஹிந்து மதம் கடவுளை மட்டும் முன்னிருத்தி வழிகாட்டும் மார்க்கம் அல்ல. வாழ்க்கை முறையை சொல்லித்தரும் கலாச்சாரம் அது. ஹிந்துத்வம் ஒரு வாழ்க்கைமுறை. காலையில் எழுவது பல் துலக்குவது குளிப்பது (ஆச்சாரக்கோவை) தொடங்கி அன்பு பெரியோரை மதிக்கும் முறை வரை அத்தனையும் சொல்லித்தருவது. அது பாரத மக்களின் வாழ்க்கை முறை.அதை கடைபிடிக்கும் யாரும் யாரையும் புண்படுத்த அவசியமில்லை. ஆனால் தேச பக்தி இல்லாத ஒரு முஸ்லிமும் தேச பக்தி இல்லாத ஒரு ஹிந்துவும் ஒரு சுயம் சேவகனுக்கு ஒருவரே.
ஆர் எஸ் எஸ் காரன் வாஹாவி இயக்கத்தை மறக்க மாட்டான். ஆனால் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் விஷத்தை விதைப்பது யார்? அங்குதான் பிரச்சினை. இது ஆழமாக விவாதிக்க வேண்டிய விசயம்.
ஒன்று தெரியுமா? ஈவேரா தமிழனே அல்ல! இன்னும் தமிழ் தமிழ் என்று பேசும் பெரும்பாலோர் தமிழனே அல்ல. இதுவும் ஆழமாக விவாதிக்க வேண்டிய விசயம். ஆனால் இவர்களை போன்றோர் விதைக்கும் விஷம் வேகமாக பரவுவது வேதனைக்குறியது. இவர்களை போல வேதங்களுக்கு தவறான விளக்கம் தருபவர்களை நம்பி ஹிந்துக்குள்ளேயே பிரிவினை ஏற்படுத்துவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கிடையில் ஆர் எஸ் எஸ் தலைவர்களாக இருக்கும் முஸ்லீம்களும் இருக்கிறார்கள்.
நாம் இன்னும் விவாதிப்போம். நான் ஒரு சுயம் சேவக். தமிழன். தேவர் இனத்தை சேர்ந்தவன். என்னுடைய உயிர்த்தோழன் ஒரு முஸ்லீம். என் மனைவியிம் அத்துனை தோழிகளும் முஸ்லிம்கள். அவள் படித்தது முஸ்லிம் பள்ளி.
சமுதாய அக்கரையோடு செய்யும் விவாதங்கள் பயனுள்ளதாக அமையும்.
நன்றி.
எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோதரர் பாலாமதி அவர்களுக்கு,
புகழுக்குரியவன் இறைவன் ஒருவனே. சகோதரரே! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
உங்கள் கருத்துக்களில் கண்ணியமும், பிறரை மதிக்கும் மாண்பும் வெளிப்படுகிறது. இதனால் உங்களுடன் உரையாடுவதிலும், கருத்து பறியமாற்றங்கள் செய்வதிலும், எனக்கு மிக்க மகிழ்ச்சியும் சந்தோஷமுமாகும், சகோதரரே!
நான் ஏற்றுக் கொண்டதாக எழுதும் எனது கருத்துக்கள் யாவும் எனது அறிவுக்கு சரி என்று பட்டவைகளே. அதை தாங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்னும் நிர்பந்தம் என்னிடமிருந்து அணுவளவும் வராது. உங்களது சிந்தனைக்கும், அறிவுக்கும், மனசாட்சிக்கும் சரி என்று படுவதை மட்டுமே எடுத்து செயல்படுத்துங்கள். அது போல, உங்களுக்கு சரி என்று படும் கருத்துக்களை தயவு செய்து தயக்கமின்றி என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் உங்களை அன்புடன் வேண்டி கொள்கிறேன்.
//இன்று நீங்கள் வேறு மதத்திலிருந்தாலும் உங்களுடைய தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு............ தாத்தாவும் உங்களூரிலிருக்கும் ஹிந்துவினுடைய தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு ................ தாத்தாவும் ஒரு காலத்தில் சகோதரர்கள்//
தங்களது கூற்றுப்படி முன்னொரு காலத்தில் எனது முன்னோர்கள் ஹிந்துக்களாகவே இருந்திருப்பார்கள். அந்த வழிமுறையில் ஏதோ ஒருவர் இஸ்லாத்தில் இணைந்ததானால் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களும் இஸ்லாமியர்களாக வாழ்ந்து வருகிறோம்.
முன்பு ஹிந்துக்களாக இருந்ததால் மட்டுமே நாம் சகோதரர்கள் என்றல்ல சகோதரரே! சீனாவிலுள்ளவருக்கும் நமக்கும், நைஜீரியாவிலுள்ளவருக்கும் நமக்கும், பராகுவேயிலுள்ளவருக்கும் நமக்கும், இப்படி உலகிலுள்ள பல்லாயிரக் கோடிக்கணக்கான மக்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றும். ஆனால் இஸ்லாத்தின் கொள்கை படி, உலகிலுள்ள எல்லா மனிதர்களும் தொப்புள் கொடி உறவுகளே. கருப்பரோ வெள்ளையரோ, பணக்காரனோ ஏழையோ, எம் மொழி பேசுபவனாலும் சரி, எந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டவர்களாயினும் சரி, நாம் அனைவர்களும் ஒரே தாய் தந்தையிலிருந்து பல்கி பெருகிய சமுதாயமே. நாம் தொப்புள் கொடி உறவுகள். எனவே பிறப்பால் நமக்குள் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது கிடையாது. நம்மில் உயர்ந்தவன் எவனென்றால் எவன் குணத்தால் நல்லொழுக்கத்தால் சிறந்தவனோ அவனே.
திருக்குர்ஆனில் அத்தியாயம் 49 வசனம் 13ல் இறைவன் கூறுகிறான், "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறியும் பொருட்டு பின்னர் உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர் தாம் இறைவனிடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர். நிச்சயமாக இறைவன் நன்கறிபவன். (யாவற்றையும் சூழந்து) தெரிபவன்."
எனவே உலக மக்கள் அனைவர்களும் சகோதர சகோதரிகளே என இஸ்லாம் உலக மக்கள் அனைவரையும் நாட்டால், நிறத்தால், மொழியால், கலாச்சாரத்தால் பிரிந்து விடாமல், நான் சார்ந்த சமுதாயம் தான் உயர்ந்தது உன்னுடைய சமுதாயம் தாழ்ந்தது என்னும் அடக்கமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
//ஹிந்துத்வம் ஒரு வாழ்க்கைமுறை.... அது பாரத மக்களின் வாழ்க்கை முறை.அதை கடைபிடிக்கும் யாரும் யாரையும் புண்படுத்த அவசியமில்லை.//
ஹிந்துத்துவம் என்பது ஒரு வாழ்க்கை முறை தத்துவம். அது அன்றாட வாழ்க்கையில் மனிதன் ஒழுக்கத்தோடு வாழ்வதற்கு காட்டும் வழிகாட்டி என்பதை தங்கள் மூலமாக அறிவதில் சந்தோஷம். அப்படியானால் ஹிந்துத்துவம் என்னும் வாழ்வியல் திட்டம் ஒரு புத்தகத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கும் என எண்ணுகிறேன். அந்த புத்தகம் எது? தென் தமிழாக்கம் எனக்கு தருவீர்களானால் நான் அதை தெரிந்து கொள்வேன்.
தாங்கள் கூறியுள்ளதை போலவே தான், இஸ்லாமும் ஒரு முழுமையான வாழ்க்கை திட்டமாகும். பிறந்தது முதல் இறக்கின்ற வரை, விழித்தது முதல் தூங்கும் வரை மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்னும் வாழ்வியலுக்கு வழிகாட்டும் மார்க்கமே இஸ்லாம்.
தாய் தந்தைகயருக்கு, உடன் பிறந்தவர்களுக்கு, சமுதாயத்துக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? எப்படி பொருளீட்டுவது, எப்படி செலவு செய்வது, எப்படி திருமணம் செய்வது, எப்படி குழந்தைகளை வளர்ப்பது, எவை அனுமதிக்கப்பட்டவை, எவை தடுக்கப்பட்டவை, குற்றவியல், சிவில் சட்டங்களுக்குரிய விதிமுறைகள் என்று அனைத்தும் தெளிவாக திருக்குர்ஆனிலும், இறைத் தூதர் முஹம்மது (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)ன் பொன் மொழிகளிலும் கூறப்பட்டுள்ளது.
இன்று சில முஸ்லிம்களுடைய செயல்பாடுகளால், இஸ்லாம் தீவிரவாத மார்க்கமாக, இஸ்லாம் அல்லாதோரை அளித்தெழிக்க வந்த மார்க்கமாக காட்டப்படுகிறது. ஆனால் நடுநிலை சிந்தனையாளர்களுக்கு நான் வைக்கும் கருத்து இது தான். இஸ்லாம் என்பது திருக்குர்ஆனும், இறைத் தூதர் முஹம்மது (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்களின் பொன் மொழிகளும் (ஹதீஸ்)ஆகிய இவை இரண்டும் தான். இந்த இரண்டின் சான்றுகளிலிருந்து இஸ்லாம் தீவிரவாதமுடைய மார்க்கம் என்று செல்வது தான் நியாயமே தவிர, முஸ்லிம்கள் செய்யும் ஒவ்வொன்றும் இஸ்லாம் ஆகிவிடாது. இருந்தாலும் முஸ்லிம்களாகிய எங்களுக்கு உள்ள கடமையும் இருக்கிறது. அது என்னவென்றால், எங்கள் சமுதாய மக்களுக்கு திருக்குர்ஆனையும், இறைத் தூதர் முஹம்மது (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்களின் பொன் மொழிகளையும் முறையாக விளக்கி அவர்களை இஸ்லாத்தின் சரியான பாதையில் திருப்பி விடவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அந்த கடமையை நாங்கள் தட்டிக் கழித்து விடமுடியாது.
இறைவன் நாடினால், இன்னும் தங்களுடன் கருத்து பறிமாற்றங்கள் செய்ய ஆவலுடன் உள்ளேன்.
எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது
மிக்க நன்றி.
தங்களுக்கு எழுதுவதற்கு முன்பு ஓரளவு இஸ்லாத்தின் தோற்றம் குறித்தும் ஆதம் தொடங்கி ஏசு வரை மற்றும் ஏசுவுக்கு 600 ஆண்டுகள் கழித்து வந்த முகம்மது அவர்கள் வரலாறும் சற்று தெரிந்து கொண்டு எழுதவேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் இன்னும் படித்து முடித்த பாடில்லை.
மதத்தின் கருத்துக்களை நிச்சயம் விவாதிப்போம். ஆனால் தேசத்தின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரலாம் என்னு நினைக்கிறேன். தயவு செய்து சட்சசீல பல்கலைகழக காலத்து இந்தியாவை நினைவு கூர்வோம். விஞ்ஞானம் வானவியல் இவற்றில் சிறந்து விளங்கிய நாம் இன்று ஏன் இப்படி ஆனோம் என்றும் பார்ப்போம். உலகம் உறங்கிக்கொண்டிருந்தபோது பல்கலைகழகம் நடத்திய நாம் இன்று ஏன் இப்படி தவிக்கிறோம் என்று பேசுவோம். இதற்கு யார் காரணம் என்று விவாதிப்போம். ஏற்றுக்கொள்வீர்களா?
ஐயா. ஆபிரஹாம்-சாரா-ஈஸாக் - ஆகார்-இஸ்மயீல் தொடங்கி இன்றுவரையுள்ள வாரலாறுகளை ஓரளவு தெரிந்து கொண்டு அதன்பிறகே தங்கள் முன்னோர்கள் ஹிந்துக்களாக இருந்திருக்க முடியும் என்ற எண்ணத்தில் கருத்து தெரிவித்தேன். மேலும் ஆன்மீக கண்ணோட்டத்தோடு பார்க்காமல் தேசீய கண்ணோட்டத்தோடு பார்த்ததாலேயே ஹிந்து - இஸ்லாம் இதோடு நிறுத்திக்கொண்டேன். மனித குலம் படைப்பில் பல கருத்துக்கள் உண்டு. பின்னர் விரிவாக விவாதிப்போம்.
ஹிந்துமதம் ஓரே புத்தகத்தில் மட்டும் விளக்கப்பட வில்லை. வேதங்கள் மற்றும் அதன் பாகங்களான உபநிசதங்கள் மீமாம்சைகள் பூர்வமீமாம்சைகள் ஆரண்யங்கள் என்றும் சிவ கந்த புராணங்கள் என்றும் இன்னும் பல புத்தகங்களில் கூறப்பட்டிருந்தாலும் அவற்றிம் அகப்பொறுள் தெறிந்து படிப்பது கடினம். தைத்திரிய உபநிசதம் மிக அற்புதமானது. ஆனால் இதையல்லாம் உங்களை படித்துப்பார்க்கச்சொன்னால் அது நடைமுறைக்கு உதவாது. அதனால் எளிய நடையில் உள்ள சில புத்தகங்களை இரண்டோரு தினத்தில் எழுதுகிறேன்.
நாம் இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். நிச்சயம் நம் வார்த்தைகள் நம்மை புண்படுத்தாது. நமக்காக மட்டும் நாம் பேச வில்லை. நாளைய நம் தலைமுறை அமைதியோடும் அன்போடும் வாழ வேண்டும். அதுதான் நம் இருவரிம் நோக்கம். நம் மதங்களின் நோக்கம். எனவே வார்த்தைக்கு வார்த்தை கவனித்து அடிக்கடி மன்னிப்புக் கேட்டு கொண்டிருக்காமல் மனம் விட்டு பேசலாமே. நீங்கள் - 32வயதாகும் எனக்கு சகோதரர் தானே. பிறகு ஏன் செயற்கைதனம். ஏற்றுக்கொள்வீர்களா?
நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். சிலநேரம் நேரம் கிடைக்காமல் தாமதமாக எழுத நேரலாம். பொறுத்தருள வேண்டும்.
நன்றி.
எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோதரர் பாலாமதி அவர்களுக்கு,
//தேசத்தின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரலாம் என்னு நினைக்கிறேன். தயவு செய்து சட்சசீல பல்கலைகழக காலத்து இந்தியாவை நினைவு கூர்வோம்.//
தாராளமாக விவாதிக்கலாம். எந்த வகையான கருத்துப் பறிமாற்றங்கள், நமக்கும், இதை படிக்கும்-பங்கு பெறும் மக்களுக்கு பயனளிக்குமோ அத்தகைய தலைப்புகளில் நாம் விவாதிக்கலாம். உங்களுடைய blogspot லேயே தலையங்கம் இடுங்கள். இறைவன் நாடினால், எனது கருத்துக்களை நான் பதிவு செய்கிறேன்.
// நாளைய நம் தலைமுறை அமைதியோடும் அன்போடும் வாழ வேண்டும். அதுதான் நம் இருவரிம் நோக்கம். நம் மதங்களின் நோக்கம்.//
நம்மில் பெரும்பான்மையினர், மக்களிடைய சகோதரத்துவமும், சமாதன எண்ணங்களும் பலமாக வேறூன்றி, அமைதியும் சந்தோஷமும் மக்களிடையே பல்கி பெறுக வேண்டும் என்ற சிந்தனை மிகுந்தவர்களே அதிகமாக இருக்கின்றோம். எனவே குழப்பவாதிகளையும், சமூகங்களுக்கிடையே பிரிவினையை உருவாக்கி அதில் பலன் அடைய நினைக்கும் கொடியவர்களையும் அடையாளம் கண்டு நாம் தனிமை படுத்தி விட்டால், நமது சுற்றுப்புறம் சுத்தமாகி விடும். அதற்காக நாம் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருப்போம் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது
மிக்க நன்றி.
ஜடாயு அவர்கள் வேதங்கள் பற்றி ஓரளவு விளக்கி இருக்கிறார். துக்ளக் பத்திரிக்கையில் சோ அவர்களும் ஹிந்துத்துவம் பற்றி நிறைய எழுதி வருகிறார். தங்களுக்கு ஏற்புடையதாயிருப்பின் படிக்கவும். மீண்டும் சந்திப்போம்.
...........................................This picture shows the location of the “Rocky Belt” which shows the moon was once split.
The unbelievers of Makkah said to the prophet that if you are truly a prophet split the moon and if you do we shall believe. It was a full moon that night…
And so the prophet prayed to Allah to grant him this miracle, and the moon was split. Half was seen over Mount. Saffa, and the other half was seen over Mount. Kaikaan.
The people said that the prophet has placed a spell on us, however if he played a trick on us, then he cant play a trick on all the people in the world! Abu Jahl then said: “let us wait until the people of Albadiah come, and if they saw the moon split, then it is true, if not then we all know it was a trick of magic.
When the people of Albadiah came they said that they too saw the moon split, and the disbelievers said “oh, how powerful Mohammad’s magic is!”
Then Allah revealed Surat al Qamar: “The hour has come near and the moon has split, and when they see a sign, they turn and say ‘this is a continuous magic’ and they disbelieved and followed their desires…”
This took place in the days of the prophet Muhammad in Makkah............................
Do you have this picture? If not I will how can I send it to you? pls advice
எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோதரர் பாலாமதி அவர்களுக்கு,
முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) தான் ஒரு இறைத் தூதர் என்பதனை நிரூபிப்பதற்காக, அவர்கள் தங்களது வாழ் நாளில் பல்வேறு சந்தாப்பங்களின் இறைவனின் நாட்டம் கொண்டு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதில் ஒன்று தான், மக்கத்து ஏக இறை மறுப்பாளர்கள் வேண்டுகோளின் படி சந்திரனை பிளந்து காட்டிய அற்புத நிகழ்வாகும்.
தாங்கள் குறிப்பிடும் புகைப்படத்தை நான் பார்க்கவில்லை. என்னுடைய மின்னஞ்சல் முகவரி mohammednaina@hotmail.com
உங்களின் blogspotக்கு அடிக்கடி சென்று ஏதேனும் பதிவிட்டுள்ளீர்களா? என்று பார்த்து வருகிறேன். ஆனால் இதுவரையிலும் இல்லை. வேலைப்பளும் ஒரு காரணமாக இருக்கலாம். தங்களுடைய உடல்நலனையும் பார்த்து கொள்ளுங்கள. இறைவன் அருளால் தாங்கள் குடும்பத்துடன் நலமுடன் இருந்து வருவீர்கள் என நம்புகிறேன்.
தங்களின் பதிவுகளை காண ஆவலுடன் இருக்கின்றேன்.
நன்றியும் வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது
I have Sent to your mail.
Post a Comment