எல்லாம் வல்ல இறைவன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு தமிழ் நெஞ்சங்களே!
சகோதரர் ஆசிப் மீரானின் "தஸ்லிமா நஸ்ரின்" பற்றிய பதிவில் பின்னூட்டமிட்ட சகோ. சிந்தாநதி அவர்கள், பர்தா குறித்து இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தார்கள். அது குறித்து சகோ. சிந்தாநதி அவர்களுக்கு சில விளக்கங்கள் அளித்து நான் பின்னூட்ட மிட்டேன். அதன் கருத்துக்கள் மீது சகோதரன் உண்மை தமிழன் அவர்கள் சில குற்றசாட்டுகளை முன் வைத்தார்கள். இவ்விரண்டையும் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
---------------------------------
அன்பு சகோ. சிந்தாநதி அவர்களே!
தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் சுதந்திரம் எவ்வளவு அவசியமோ, அது போலவே கட்டுப்பாடும் மிக அவசியமான ஒன்றாகும் என்பதை முதலில் உங்களின் மேலான கவனத்திற்க்கு அறிய தருகிறேன்.
சுதந்திரம் சாப்பாடு போன்றது மனிதனுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஆனால் கட்டுப்பாடு மருந்து போன்றது எடுத்துக் கொள்ள சிரமமாக தான் தெரியும். வரையறையில்லாத சுதந்திரத்தால் ஏற்படும் ஒழுக்கச் சீர்கேடு என்னும் நோயிலிருந்து, பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பெற்றுத் தரும் நிவாரணியாக கட்டுபாடு உள்ளது. ஒரு சமுதாயத்தில் சுதந்திரமும், கட்டுபாடும் சமச்சீராக இருக்குமானால் அந்த சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயமாக திகழும். வரையறையில்லாத சுதந்திரம் ஒழுக்கச் சீர்கேடுகளை கொண்டுவந்து சேர்ப்பது போல, வரையறையில்லாத கட்டுபாடுகள் அடிமை சமூகத்தை, தாழ்வு மனப்பான்மை கொண்ட கீழ் நிலை சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
சகோதரி கமலா சுரையா அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பின் அளித்த ஒரு பேட்டியிலே குறிப்பிட்டார், "சுதந்திரம் மட்டுமே ஒரு சமூகத்தின் முற்போக்கு சிந்தனையின் அளவுகோலாகவும், நாகரிகத்தின் வளர்ச்சியாகவும் கருதப்படுமேயானால், பகுத்தறிவில்லாத மிருகங்களே இவற்றிக்கு முன்னுதாரங்களாக கருதப்பட வேண்டும். ஏனென்றால் மிருகங்கள் தான் வரையறையில்லாத சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. ஆனால் நான் கட்டுபாடான சுதந்திரத்தையே விரும்புகிறேன்" சிந்தித்து பார்க்க வேண்டிய சிறப்பான வாக்கியங்கள் இல்லையா? சகோ. சிந்தாநதி அவர்களே!
பிறருக்கு காமவுணர்வுகளையும், வக்கிரகரமான எண்ணங்களையும் தூண்டும் வகையில் ஆடை அணியாமல், கண்ணியமாக, பிறர் மனங்களில் சபலங்களை உண்டாக்காத வகையில் உடலுறுப்புக்களை மறைத்து ஆடை அணிந்து கொள்ள சொல்வதே இஸ்லாம் கூறும் பர்தா முறையாகும். இவ்வாறு உடலை மறைத்துக் கொள்ள, எந்த துணியையும் எந்த முறையிலும் எந்த கலரிலும் அவரவரின் வசதிக்கும், சுயவிருப்பத்திற்க்கும் ஏற்ப தேர்வு செய்து கொள்ள இஸ்லாம் சுதந்திரம் அளித்திருக்கிறது. ஆக இந்ததந்த பகுதிகள் எல்லாம் மறைக்கப்பட வேண்டும் என்ற கட்டுபாடு, அதே நேரத்தில் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற துணிகளை தேர்வு செய்யும் சுதந்திரம். இப்படி கட்டுபாடான சுதந்திரத்தை இஸ்லாம் வழங்குகிறது. கருப்புத் துணியால் உடலனைத்தையும் பொதிந்து கொள்ள சொல்லும் அடக்குமுறையான கட்டளையல்ல பர்தா. அவ்வாறு இஸ்லாம் கூறுவதாக நீங்கள் அறிந்திருந்தால், உங்களுக்கு இஸ்லாம் தவறாக எடுத்து காட்டப்பட்டுள்ளது.
எனது விருப்பத்திற்க்கு ஏற்ப எம்முறையிலும் ஆடை அணிவேன் என்று கூறி பிறருக்கு காமவுணர்வை தூண்டுவது அவர்களின் சுதந்திரத்தை பறிப்பது இல்லையா? ஒருவருடைய கட்டுபாடற்ற சுதந்திரம் மற்றவருக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் தரும் போது அது சுதந்திரமாகுமா? சர்வாதிகாரமாகுமா? சிந்தித்து பாருங்கள் சகோ. சிந்தாநதி அவர்களே!
சுயவிருப்பத்திற்க்கு மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்க்கும் எல்லைகள் இருக்க வேண்டும். அந்த எல்லைகள் தான் கட்டுபாடாகும். இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் சமுதாய கண்ணோடு ஏற்படுத்தபட்டதாகும். தனிமனிதனுக்கு நன்மையும், சமுதாயத்திற்க்கு சீர்கேடும் தரும் வரையறையற்ற சுதந்திரத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சமுதாயத்திற்க்கு நன்மையையும், தனிமனிதனுக்கு கண்ணியத்தையும் கெளரவத்தையும் பெற்று தரும் கட்டுபாடான சுதந்திரத்தை இஸ்லாம் போதிக்கிறது. எனவே இஸ்லாம் வலியுறுத்தும் பர்தா பெண்களை அடிமைபடுத்துவதன் அடையாளமல்ல. கண்ணியத்தையும் மாண்பையும் பெண்களுக்கு பெற்றுத் தரும் பாதுகாப்பாகும். நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். தங்களுக்கு இன்னும் இது குறித்த ஐயங்களும் சந்தேகங்ளும் இருந்தால் தாராளமாக எழுப்புங்கள். இறைவன் நாடினால் விளக்கம் தருகிறேன்.
//முஸ்லிம் பெண்கள் மீது பர்தாவை திணிக்கக்கூடாது என்ற தஸ்லிமா 'Let us burn the burqa' என்கிறார். அப்படியென்றால் அணிவதைத் தான் திணிக்கக்கூடாது, அவிழ்ப்பதைத் திணிக்கலாம் என்றல்லவா ஆகிறது.//
சரியான எடுத்துகாட்டு சகோதரி ஷாஹிதா அவாகளே! புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே! இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
-------------------------------------------
சகோதரர் உண்மைத் தமிழனுக்கு தந்த பதிவு
------------------------------------------
அன்பு சகோதரர் உண்மைத் தமிழன் அவர்களே!
எனது பின்னூட்டத்தை தாங்களட பார்வையிட்டதற்கும், அது குறித்த தங்களின் கருத்துக்களை தெரிவித்ததற்கும் முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இன்னும் சற்று விரிவாக இது குறித்து தங்களுடன் கருத்து பரிமாற்றம் செய்ய ஆர்வப்படுகிறேன். எனவே இதே பின்னூட்டத்தை பதிவாக எனது வலைப்பூவில் பதிவும் செய்கிறேன்.
1) சகோதரரே! ஆடையணிவதன் அவசியங்கள் என்னவென்றால், முதலில் மானத்தை மறைப்பதற்கும், தட்பவெட்ப சூழ்நிலைகளிலிருந்து உடலை பாதுகாப்பதற்கும், கண்ணியமான தோற்றத்தை தருவதற்குமாகும். இதுவே ஆடையின் அவசியமாக நான் அறிந்திருப்பதாகும். இதில் தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா?
2) உடல் அமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்று போல் இல்லாததினால், மேலே குறிப்பிட்ட அவசியத்திற்காக ஆடையணியும் போது, ஆணைப் போல தான் பெண்ணும் உடையணிவாள் என்னும் சமத்துவ வாதம், பகுத்தறிவு ஒவ்வாது. எனவே ஆண் அவனது உடலமைப்புக்கு தகுந்த மாதிரியும், பெண் அவளது உடலமைப்புக்கு தகுந்த மாதிரியும் உடையணியதான் வேண்டும். இந்த எனது கருத்தில் உங்களுக்கு தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா? சகோதரரே!
3)மேற்கத்திய மோகத்தால் ஏமாற்றப்படும் நமது நாட்டு சகோதரிகளில் சிலர், அரைகுறையாக ஆடையணிந்ததன் விளைவாக நமது பல்கலைக்கழகங்கள், பெண்கள் ஆடை அணிந்து வருவதற்க்கு கட்டுப்பாடுகள் விதித்ததே? அதன் காரணம் என்ன? உடல் பரிமாணத்தின் தோற்றத்தை வெளிகாட்டும் வகையில் அந்த பெண்கள் அணிந்து வந்தது, சமூகசீர்கேட்டிற்கு வித்திடுகிறது என்ற கவலையால் தானே? தாங்கள் கூறுவது போல, மாணவிகள் எப்படி வேண்டுமானாலும் உடையணிந்து வாருங்கள், யாருக்கு பிடிக்கவில்லையோ அவர்கள் கண்களை கட்டிக் கொண்டு வரட்டும் என்றா கூறினார்கள்? ஐயா! பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்னும் தங்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் எவை பெண்களுக்கு எதிரானவை, எவை பெண்களுக்கு பாதுகாப்பானவை என்பதை பிறித்தறிந்து அதனடிப்படையில் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த எனது கருத்தில் உங்களுக்கு தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா? சகோதரரே!
4) நாம் நமது வீட்டு பெண் மக்களை அழைத்துச் செல்லும் போது, பிறர் சற்று கூர்ந்து பார்த்தாலே நமக்கு உள்ளமெல்லாம் பதறுகிறதே, அதே பெண்கள் அருவருப்பான உடையணிந்து வந்தால் எல்லோரின் பார்வையும் இவாகள் மீது தானே படியும், இதை தன்மானமுள்ள நாம் ஜீரணிக்க முடியுமா? அந்நிலையில் அது அவள் சுதந்திரம் என்று எவன் வக்கிரமாக பார்த்தால் எனக்கென்ன என்று இருப்பீர்களா? அல்லது வக்கிரமாக பார்ப்பவனுடன் சண்டையிடுவீர்களா? அல்லது நமது பெண்ணுக்கு அறிவுரை கூறி திருத்துவீர்களா? நமது பெண்ணுக்கு நம் கலாச்சாரத்தின் மேன்மையை கூறி கண்ணியமாக உடையணிய அறிவுரை கூறுவது தான் எனது கருத்தாகும். இந்த எனது கருத்தில் உங்களுக்கு தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா? சகோதரரே!
5)ஆண், பெண்கள் வரையறையின்றி பழகுவது மேற்கத்திய கலாச்சாரம். அதனால் தான் கல்யாணத்துக்கு முன்பே கற்பமாகும் நிலை அங்கு மிக சகஜமானதாகும். கற்பின் மாண்பு என்ன என்பதை அறியாத அவல நிலையில் இருக்கிறார்களே அதன் காரணம் ஆண் பெண் வரையறையின்றி பழகுவததால் தானே? இன்று நமது மக்களும் அது தான் நாகரீகம், முன்னேற்றத்தின் அடையாளம், என்று ஏமாறி வருவதால் இன்று மெதுவாக நமது சமுதாயத்திலும் ஒழுக்க சீர்கேடுகள் மலிந்து போய் உள்ளதா? குறைந்து வருகிறதா?அதன் வெளிப்பாடு தானே, இன்று பல விடுதிகளில் இரவு நடனங்கள் நடைபெறும் காமகளியாட்டமாகவும், பல பங்களாக்கள் விபச்சாரத்தின் தொட்டில்களாகவும் மாறியதோடு குஷ்பு போன்ற கழிசடைகள் கூட மிகச் சாதாரணமாக கல்யாணத்திற்கு முன் உடலுறவு வைப்பதில் தவறில்லை என்று கற்பை பற்றி மிகச் சாதரணமாக கருத்து கூறினாள். தொட்டில் குழந்தை திட்டம் தீட்ட வேண்டிய துர்பாக்கிய நிலை இன்று நமக்கு உருவானதே? ஏன்? 20-25 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு திட்டத்தை யாரும் யோசித்து பார்த்திருப்பார்களா? மேலை கலாச்சாரத்தில் மோகம் கொண்டதன் விளைவு, ஆண் பெண்கள் வரையறையில்லாமல் பழகும் சூழல் மலிந்ததால் தான் இத்தகைய சீர்கேடுகள் நமது சமூகத்தில் துளிர்விட்டுள்ளன என்பது என் கருத்தாகும். இந்த எனது கருத்தில் உங்களுக்கு தங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டா? சகோதரரே!
6) நீங்கள் கேட்டிருக்கிறீர்களே? பெண்கள் எப்படி வந்தால் என்ன? ஆண்களை கண்களை கட்டி கொள்ள சொல்லி கட்டுபாடு விதிக்க முடியுமா? என்று வினா எழுப்பி ஆணாதிக்க மார்க்கமாக இஸ்லாத்தை தவறாக நினைத்து விட்ட சகோதரா! நீங்கள் சொல்லுவதற்கு 1425 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் அத்தியாயம் 24 வசனம் 30ல் கூறிவிட்டது ஆண் தனது பார்வையை காமத்தின் கோரத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று. "(நபியே!)இறைநம்பிக்கையுடைய ஆண்களுக்கு நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்தி கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களை பேணி பாதுகாத்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிக பரிசுத்தமானதாகும். நிச்சயமாக இறைவன் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்." பொதுவாக கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே அவசியமானதாக கூறப்படும் வேளையில், ஆண்களுக்கு கற்பின் அவசியத்தை இந்த வசனம் எடுத்துக் கூறுகிறதே. இது தான் ஆணாதிக்கமா?. கற்பின் அவசியத்தை முதலில் ஆண்களுக்கு அறிவுறுத்திவிட்டு (30வது வசனம்)அடுத்து தான் (31வது வசனம்) பெண்களுக்கு கற்பின் அவசியத்தையும், பெண்கள் மறைக்க வேண்டிய உடல் பாகங்கள் என்னென்ன என்பதையும் இந்த வசனம் விளக்குகிறது. "இன்னும் இறைநம்பிக்கையுடைய பெண்களுக்கும் நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளை தாழ்த்தி கொள்ளவும். தங்கள் வெட்கத் தலங்களை பேணி பாதுகாத்து கொள்ளவும். தங்கள் அலங்காரத்தில் சாதரணமாக வெளியில் தெரியக் கூடியதை தவிர, வேறு எதையும் வெளியில் காட்ட கூடாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்பு பகுதிகளை மறைத்து கொள்ள வேண்டும்......"
ஆக எங்கே பெண்ணடிமை தனம் இஸ்லாத்தில்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் கற்பை பேணிக் கொள்ள கட்டளையிட்டதில் ஏதேனும் பாராபடசம் காட்டபட்டுள்ளதா? கருப்பு துணியால் ஒட்டு மொத்த உடலை மூடி விட கூறியுள்ளதா? இயல்பாக தெரிய வேண்டிய பகுதிகளை (முகம், முன்கை, பாதம்) பகுதிகளை தவிர தான் மறைக்க சொல்கிறது.
எனவே சகோதரர் உண்மை தமிழன் அவர்களே! உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். இன்னும் தங்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருக்குமானால், தாராளமாக கேளுங்கள். எனது அறிவுக்கு தெரிந்த மட்டில் உங்களுடன் எனக்கு தெரிந்தவைகளை இறைவன் நாடினால் பரிமாறிக் கொள்கிறேன்.
------------------------------------------
அன்பு தமிழ் நெஞ்சங்களே!
எனது கருத்துக்களில் உண்மையிருக்கமானால், புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே. தவறுகள் இருந்தால், அது என் சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அது சரியாக சுட்டிக்காட்டப்பட்டால் என்னை திருத்தி கொள்ளுவேன்.
நன்றியும், வாழ்த்துக்களுடனும்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது
Wednesday, April 25, 2007
Friday, April 6, 2007
விதண்டாவாதத்திற்க்கு தீர்வு உண்டா?
எல்லாம் வல்ல ஏக இறையோன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு தமிழ் நெஞ்சங்களே!
சகோதரர் நேசக்குமார் அவர்கள் என்னிடத்தில் இஸ்லாம் குறித்து 5 வினாக்கள் என்னிடத்தில் கேட்டிருந்தார். எனக்கு தெரிந்த வகையில் அவைகளுக்கு பதில் கூறியிருந்தேன். எனது பதில்கள் அனைத்தும் மிகச் சரியானதே என்று நான் வாதாடிட மாட்டேன். ஏனென்றால், நமது அறிவுக்கு, சக்திக்கு, சிந்தனைக்கு எல்லாம் ஒரு வரையறையிருக்கிறது. இந்த வரையறைகள் ஒரு சிலருக்கு சற்று அதிகமாகவும், சிலருக்கு சற்று குறைவாகவும் இருக்கிறது. இந்த அடிப்படையில் மனிதன் என்பவன் தவறுகள் செய்யக் கூடியவனே, இறைவன் ஒருவனே இத்தகைய குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் என்னும் நம்பிக்கையுடையவன் நான். எனவே எனது சிந்தனைகளில், ஆய்வில், கருத்துக்களில் தவறுகள் வர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அந்த ஐயத்தால் தான் நான் ஒவ்வொரு முறையும் எனது பதிவகளின் இறுதியில்,"எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்", என எழுதுகிறேன். ஒருவர் அவரது தவறுகளை ஏற்றுக் கொள்வது என்பது அவருக்கு சிறுமையோ அல்லது கேவலமோ அல்ல, மாறாக அவரின் பெருந்தன்மையும், தைரியமும், சிறந்த பண்பும் ஆகும்.
இந்த அடிப்படைகளில், சகோதரர் நேசக்குமார் ஏதும் தவறுகளை கூறி இருப்பாரேயானால், அவற்றை ஏற்பதற்கு நான் எவ்வித தயக்கமும் காட்டியிருக்க மாட்டேன். ஆனால் அவரது மறுப்புகள் அனைத்தும், அவரது மனமுரண்டை தான் காட்டுகிறது, எதிர்க்க வேண்டும் என்பதற்காக எனது கருத்துக்களை அவரது விருப்பத்திற்கு ஏற்ப வளைப்பது அவரது நேர்மையற்ற தனத்தை பறைசாற்றுகிறது.
நான் பொய்யுரைப்பதாகவும், தடுமாறுவதாகவும் கூறும் சகோதரர் நேசக்குமார் இதன் மூலம், தான் யார்? தனது ஆய்வுகளின் தரமும், நேர்மையும் எத்தகையது? தனது கருத்துக்களின் உண்மை நிலை எத்தகையது? என்பதை நடுநிலையாளர்கள் உணர்த்திட வைத்திருக்கிறார். எல்லா புகழும் இறைவனுக்கே!
அன்பர்களே! இஸ்லாத்தின் கொள்கை என்ன? என்பதனை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட ஆசைப்படுகிறேன்.1) இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை, "வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே அன்றி வேறில்லை. முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் இறைவனின் திருத் தூதர் ஆவார்கள்.
2) இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இரண்டு மட்டுமே ஆதாரங்களாகும். ஒன்று திருக்குர்ஆன் மற்றொன்று ஹதீஸ் (முஹம்மது நபி [இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!] அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்). இவ்விரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரிப்பது இஸ்லாம் அல்ல. இரண்டையும் சேர்த்து அடிப்படை ஆதாரங்களாக ஏற்ப்பது தான் இஸ்லாமாகும். திருக்குர்ஆனில் இறைவன், தனக்கு வழிப்பட்டு, கட்டுப்பட்டு நடக்க சொல்லும் போதெல்லாம், இறைத்தூதர் அவர்களுக்கும் வழிப்பட்டு, கட்டுப்பட்டு நடக்க சேர்த்து கூறும் ஏராளமான வசனங்கள் காணக்கிடக்கின்றன். அதனை மேலும் வலுவூட்டும் விதத்தில் 33வது அத்தியாயத்தில் 21வது வசனத்தில், "இறைவனின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து இறைவனை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக இறைவனின் தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கிறது" என்று கூறுகிறான். எனவே, எங்களின் மனோயிச்சைப்படி நாங்கள் இரண்டை ஆதாரமாக எடுக்கவில்லை. மாறாக! குர்ஆனின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே, இறைவனின் கட்டளையால் தான் எடுத்துள்ளோம்.
3)இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், வழிகாட்டல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பதால், இவ்விரண்டை கொண்டே இஸ்லாமிய ஷரீயத்து உருவாக்கப்பட்டுள்ளது.
4) திருக்குர்ஆனில் எல்லா கட்டளைகளும் கூறப்பட்டுள்ளது. அந்த கடமைகளை எப்படி நிறைவேற்றுவது? அதற்கான சட்டங்கள் என்னென்ன? என்னும் விளக்கங்கள் ஹதீஸிலிருந்தே பெறுகிறோம். உதாரணத்திறக்கு, குர்ஆனில் தொழ இறைவன் கட்டளைவிடும் வசனங்கள் இடம் பெறுகிறது. எப்படி தொழுவது? எத்தனை முறை தொழுவது? அதற்குரிய நேரங்கள் என்னென்ன? தொழுகை செய்வதற்க்கு அவசியமானவைகள் என்னென்? எப்போது, என்னென்ன சூழ்நிலைகளில் தொழ கூடாது? இப்படி தொழுகையின் விளக்கங்கள் ஹதீஸிலிருந்தே பெறுகிறோம். எனவே, குர்ஆனில் கட்டளைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்த வேண்டிய விளக்கங்கள் ஹதீஸில் தான் உள்ளன.
இப்போது, சொல்லுங்கள் எங்கே எனது பதில்களில் பொய் இருக்கிறது? எங்கே தடுமாற்றம் இருக்கிறது? எங்கே குழப்பங்கள் இருக்கிறது? நாங்கள் ஹதீஸையும் பின்பற்றுவதால் குர்ஆனுக்கு முரண்பட்டு விட்டோமா?ஆக நாங்கள் தெளிவாக, முரண்பாடில்லாமல் சரியாகவே பின்பற்றி கொண்டிருக்கிறோம்.
அடுத்து, அனைத்து முஸ்லிம்களும் ஹதீஸை ஏற்று கொள்வதில் ஒரே கருத்துடையவர்களாக இருக்கிறார்களா? என்ற ஒரு கேள்வியை வைத்து இஸ்லாத்தில் குழப்பங்கள் இருப்பதாக காட்ட முன் வருகிறார் சகோதரர் நேசக்குமார். ஐயா, முஸ்லிம் பெயர் வைத்து கொண்டு, அவரது மனோயிச்சைப்படி கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வகுத்து அதை இஸ்லாமாக சிலர் காட்டுவதால், இஸ்லாத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன,எனவே இஸ்லாத்தில் குழப்பங்களும், தடுமாற்றங்களும் நிறைந்திருக்கின்றன என்று சொல்வது அறிவுடைய வாதாமா? நான் பின்பற்றும் கொள்கையில், கோட்பாடில் குழப்பங்களோ, சந்தேகங்களோ இருந்தால் அதுபற்றி கேளுங்கள்? அதில் நியாயம் இருக்கிறது. அல்லது நான் பின்பற்றும் கொள்கையும் நன்கு படித்தறிந்து விட்டு, எங்களது கொள்கைக்கு முரண்பாடான கொள்கையுடையவர்களின் கொள்கையும் நன்கு படித்தறிந்து விட்டு, அவர்களுடைய கோட்பாடில் தான் உண்மையிருக்கிறது எனது கோட்பாடில் உண்மையில்லை என்று வாதிடுங்கள், அதில் நியாயமிருக்கிறது. ஒரு கோட்பாடிலிருந்து வித்தியாசப்பட்டு இன்னொரு துணைக் கோட்பாடுகள் உருவாக்குவதை மனிதர்களால் தடுக்க முடியாது. அதற்காக அந்த கோட்பாடு குழப்பாமானது என்று கூறுவது அபத்தமான வாதமாகும். இரண்டையும் நன்கு படித்து விட்டு முதல் கோட்பாடு சரியானதா? அல்லது அதிலிருந்து பிரிந்த துணைக் கோட்பாடு சரியானதா? என்று வாதிட்டால், அல்லது இரண்டுமே இன்னின்ன காரணங்களால் தவறானவை என்று வாதிட்டால், அது தான் நியாயமான வாதமாகும்.
இப்போது குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் இருப்பது யார்? மனமுரண்டாக விதண்டா வாதம் செய்பவர் யார்? காழப்புணர்வால் களங்கம் கற்பிக்க முயல்பவர் யார்? என்று நடுநிலையான சிந்தனையாளர்கள் அறிந்து கொள்வார்கள்.
எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

Subscribe to:
Comments (Atom)