Friday, May 18, 2007

நெஞ்சில் துணிவில்லாத, நேர்மை திறமில்லாத நயவஞ்க நாயகர்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதர சகோதரிகளே!
மேலப்பாளையத்தில் ஒரு முஸ்லிம் சகோதரி சில முஸ்லிம்களாலேயே கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சகோதரன் அரவிந்தன், "தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்களை தாக்கும் ஜிகாதிகள்: ஜிகாத் 2007" என்ற தலைப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவிலேயே, இலவச இணைப்பாக, "இந்த பச்சை படுகொலைகளுக்கு வரும் நைனாவின் 'பேரருளாளனின் பெயரால்' சால்ஜாப்புகளை இப்பதிவு வரவேற்கிறது." என்று கூறி முடித்திருந்தார்.
இந்த பதிவின் மூலம் அவர் நிலை நிறுத்த வந்த விசயம் இரண்டு.
1) இஸ்லாம், முஸ்லிம்களை கொலை செய்வதை மார்க்க கடமையாக ஆக்கியுள்ளது என்றும், வன்முறையை வளர்க்கும் மார்க்கம் இஸ்லாம் என்றும் முன்னிலை படுத்தியுள்ளார்.
2) முஸ்லிம்கள் கொலை செய்ய படுவதை ஆதரிப்பவர்கள். எனவே இந்த படுகொலையையும், ஏதாவது சாக்கு போக்கு காட்டி சரி என்று வாதிடவே முன்வருவார்கள்.
இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்ட நான், இந்த படுகொலையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய மிருகத்தனமான காரியத்தை செய்தவர்கள், இவ்வுலகில் மரணதண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் என்பதோடு மட்டுமல்லாது, மறுவுலக வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு உரித்தானவர்கள், என்பதனை என் மனோயிச்சை படி, இஸ்லாத்தை உயரிய மார்க்கமாக வெறும் வார்த்தைகளால் மக்களுக்கு முன்னிலைபடுத்த வரவில்லை. மாறாக, இஸ்லாமிய போதனைகளின் அடிப்படை ஆதாரங்களான குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரத்தோடு காட்டியிருந்தேன். அந்த ஆதாரங்கள் இதோ,
நிச்சயமாக எவனொருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியல் ஏற்படும் குழப்பத்தை (தடுப்பதற்காவோ) அன்றி, மற்றொருவரை கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவரொருவர் ஓர் அத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவர் போல அவார்..... (திருக்குர்ஆன் அத்தியாயாம் 5 வசனம்: 32)வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கிகயிருப்பவற்றையும் ஏவியிருபவற்றையும், நான் உங்களுக்கு நான் ஓதி காண்பிக்கிறேன். எப்பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெளிப்படையான இரகசியமான மானகேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்க்கு அல்லாமல் கொலை செய்யாதீர்கள். இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவ்வாறு போதிக்கிறான்...... நீங்கள் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் நியாயமே பேசுங்கள். (திருக்குர்ஆன் அத்தியாயாம் 6 வசனம்: 151 -152)இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் கூறினார்கள், எவனொருவன் அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்கின்றானோ, அவன் சொர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது.இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் தனது தோழர்களிடம் ஒரு முறை கேட்டார்கள்,"திவாலானவன் யார் என்று அறிவீர்களா?". அதற்க்கு தோழர்கள் பதில் கூறும் போது, பொருளாதாரத்தால் பாதிப்படைந்தவனே திவாலானவன் என்று கூறும் போது, இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் கூறினார்கள், "அதுவல்ல. திவலானவன் எவன் என்றால் மறுமையில் தான் இறைவனுக்கு செய்த அமல்களினால் பெரும் நன்மைகளை சேகரித்தவனாக இறைவனிடத்தில் வருவான். ஆனால் சக மனிதர்களுக்கு, அதிகமான துன்பங்களை தந்ததிருப்பான். இதனால், நன்மையை கொண்டு வந்தனின் நன்மைகள், அவனால் பாதிக்கப்பட்டோருக்கு பகிர்ந்தளிக்கப்படும். இவன் நன்மைகள் எல்லாவற்றை இழந்த பின்பும், இவனால் பாதிக்கப்பட்டோர் இருப்பார்கள். எனவே, பாதிக்கப்பட்டோரின் தீமைகள் இவனுக்கு கொடுக்கப்படும். பின்பு நரகத்தில் வீசி எறியப்படுவான். இந்த நபி மொழி, இறைவனை வணங்குவது மட்டுமே ஒரு முஸ்லிமுக்கு முக்கியமல்ல, அதோடு சக மக்களுக்கு தீங்கிழைக்காதவனாக இருந்தால் மட்டுமே சொர்கத்தை அடைய முடீயும் என்பதை தெளிவாக விளக்குகிறது. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்று கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் (திருக்குர்ஆன் அத்தியாயாம் 24 வசனம்: 4)
இப்போது, அரவிந்தன் நேர்மை, நாணயம், பண்புள்ள மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பார்?,
ஒன்று இந்த ஆதாரங்களைகளின் அடிப்படையில் இஸ்லாம் வன்முறையை, சமதாயத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அல்லது
எனது ஆதாரங்களில் உள்ள தவறுகளை சொல்லி, அவரது வலுவான ஆதாரங்களை முன் வைத்து, இஸ்லாம் வன்முறையையும், குழப்பங்களையும் உருவாக்கும் தீவிரவாத மார்க்கம் தான் என்பதனை நிறுவியிக்க வேண்டும்.

இந்த இரண்டில் எதையுமே செய்யாத, மனசாட்சியில்லாத அரவிநதன் குள்ள நரி புத்தியான குறுக்கு வழியை கையாண்டு வாதத்தை திசை திருப்பினார். சங்பரிவார சாக்கடைகளுக்கே உரித்தான தனி வழி அது. அது தான் உணர்வுகளை தூண்டி, அதன் மூலம் தங்களது பலகீனங்களை (இந்த இடத்தில் நேர்மையான வாதத்தை தொடர முடியாத நிலை) மறைத்து நாடகமாடும் நயவஞ்சக செயல்.

இதற்கிடையில் அரவிந்தனின் அடிவருடியாக ஒருவர் பனித்துளி என்ற பெயரில் வந்தார். முதலில் எனது ஆதாரங்களை ஏற்று கொள்வதாக கூறிய அவர் மேலும் கூறினார், தமுமுக தலைவர், "இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ஒழுக்கமில்லாத பெண்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும். பல மத்தியகிழக்கு நாடுகள் இந்த முறையை கொண்டு வந்ததன் மூலம் பெண்களை ஒரு கட்டுப்பாட்டில் வைக்கமுடிகிறது. இந்த மாதிரி விசயங்களை கையாள இதுவே ஒரே வழி.", கூறியுள்ளாரே எனவே, "நீங்கள் சொல்லுவது உண்மையானால் தமுமுக தலைவர் சொன்னது தவறு. இஸ்லாத்திற்கு எதிரானது. அவரை தைரியமாக கண்டிக்க உங்களது இஸ்லாத்திற்கு தைரியம் இருக்கிறதா?", எனக் கேட்டார். சகோதரர் பனித்துளி காட்டிய அந்த வாசகம், அநியாயமான கருத்தை உட்கொண்டுள்ளது என்பதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை. ஏனென்றால், விபச்சாரம் செய்யும் பெண்களை கல்லெறிந்து கொன்றால், மேலப்பாளையம் போன்ற சம்பவங்கள் தொடராது, என்று கூறுவது மானக்கேடான விபச்சாரத்திற்கு அடிகோள்பவர்கள் பெண்கள் என்பது போலவும், விபச்சாரம் செய்யும் பெண்களை கொன்று விட்டால் சமூகம் சுத்தமாகி விடும் என்றும் கூறியது ஆணாதிக்க வெளிபாடு. இஸ்லாம் விபச்சாரம் செய்யும் ஆண் பெண் இருவரையும் தண்டிக்க சொல்கிறது. அதுவும் திருமணமாகியும் விபச்சாரம் செய்பவர்களை தான் கல்லெறிந்து கொள்ள சொல்கிறது. எனவே சகோதரர் மேற்கோள் காட்டிய வாசகம் கண்டிக்கபட வேண்டிய வாசகமே. ஆனால், தமுமுக நெல்லை மாவட்ட நிர்வாகி அவ்வாறு கூறியது உண்மை என்றால் தானே அவரை கண்டிக்க முடியும்? எனவே தமுமுகசை சார்ந்த நபர் தான் இதே வாசகத்தை கூறினார் என்பதற்கு வலுவான ஆதாரம் வேண்டும் என நான் கேட்ட போது, இந்தியன் எக்பிரஸின் 26 மார்சு செய்தியை ஆதாரமாக்கினார். அது வலுவில்லாத ஆதாரம். ஒரு சார்பு நிலையுடைய(தமுமுகவை வெறுக்கும்) செய்தியாளரின் தகவல் என்பது அந்த செய்தியை வாசிக்கும் போதே தெளிவாகிறது. அந்த செய்தியாளர், //Tamil Nadu Muslim Munnetra Kazham, a political outfit which police think is linked to Al Umma.// என்று மிகப் பெரும் பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார்.தமுமுக என்ற இயக்கம், இந்திய இறையாண்மை, அரசியல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது செயல்பாடுகளை அமைத்து, முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகும். தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்யும் பேரியக்கமாக மட்டுமல்லாது, மத வேறுபாடுகள் பார்க்காமல் பல்வேறு சமயத்தில் (சுனாமி...) சமூக பணியாற்றும் இயக்கமாகவும் செயல்பட்டு வருகிறது. இப்படிபட்ட ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய ஒரு அமைப்பை, இஸ்லாத்தால் நிராகரிக்கபடும் தீவிரவாதத்தை கொள்கையாக கொண்ட அமைப்பின் அரசியல் இயக்கமாக இந்த செய்தியாளர் பதிவு செய்துள்ளாரே, இதுவே இவர் தமுமுகவின் மீது வெறுப்பு கொண்டவர் என்பதற்கு மிகப் பெரும் சாட்சியாகும். தடை செய்யப்பட்ட அமைப்பின் அரசியல் அமைப்பாக தமுமுக எப்படி இருக்க முடியும்? எனவே ஒரு இயக்கத்தின் மீது வெறுப்புணர்வு கொண்ட செய்தியாளரால் பதிவு செய்யப்பட்ட தகவலில் உண்மையிருப்பதாக நம்ப முடியாது. எனவே, இது நிராகரிக்கப்பட வேண்டிய ஆதாரமாகும். வேறு ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள் என்று என் நிலைபாட்டை கூறினேன். அதற்கும் பதிலில்லை.
ஆக, நான் இஸ்லாத்தை பற்றி கொண்டுள்ள அறிவின் படி இந்த விசயத்தில் கொண்டிருக்கும் நிலைபாடுகள்
1) மேலப்பாளையத்தில் முஸ்லிம் சகோதரியை படுகொலை செய்த மாபாதகர்கள், இஸ்லாத்தால் வெறுக்கபடுபவர்கள். இவ்வுலகிலும் மரண தண்டனையளிக்கப்பட்டு கேவலப்படுத்தபட வேண்டும். மறுவுலகிலும், அல்லாஹ் இவர்களுடைய நன்மைகளை அந்த சகோதரிக்கோ அல்லது அந்த சகோதரியின் தீமைகளை இந்த பாதகர்களுக்கோ வழங்கி. மறுமையிலும் இவர்கள் அல்லாஹ்வால் இழிவுபடுத்தபடுவார்கள் என்பதே குர்ஆன் ஹதீஸிலிருந்து நாம் அறியும் பாடமாகும். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
2) சங்பரிவார சக்கடைகளுக்கு நேர்மையான கருத்து பரிமாற்றங்கள் மூலம் புரிந்துணர்வை வளர்த்து, சகோதர நல்லிணக்கத்தை காண்பதில் அணுவளவும் ஆர்வம் இல்லை. எப்படியும் இஸ்லாத்தை களங்கப்படுத்த வேண்டும், முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை முஸ்லிமல்லாதவர்களிடம் விதைக்க வேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தை செயல்படுத்த எதையும் செய்ய தயாராக இருக்கும் கீழ் தரமான, பாஸிச வெறியர்கள்.
3) சகோதரர் பனித்துளி மேற்கோள் காட்டிய வாசகம், பெண்களை இழிவுபடுத்தி ஆணாதிக்க காவத்தின் வெளிப்பாடான வாசகம் என்ற அடிப்படையில் கண்டிக்கப்பட வேண்டிய வாசகமே. ஆனால், தமுமுக நெல்லை மாவட்ட நிர்வாகியை நேரடியாக விழித்து கண்டிக்க தகுதியான ஆதாரங்கள் தந்தாலே தவிர, அவரை கண்டிப்பது நியாயம் அல்ல. அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், எல்லா புகழும் இறைவனுக்கே!தவறிருந்தால் என் சிறுமதியால் வந்ததாகும். சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன்.
நன்றி. வாழத்துக்கள்.
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

3 comments:

Anonymous said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக...

திரு.நெய்னா..
தங்கள் பதிவுகளையும்,தங்களின் பின்னூட்டங்களையும் சமீபகாலமாக விடாமல் படித்து வருகிறேன். தங்களின் வாதத்திறமை மிக மிக நேர்மையாகவும்,கண்ணியமாகவும் உள்ளது.எடுத்துக்கொண்ட கருப்பொருளை உருக்குலையாமல் புரியவைக்கிறீர்கள். இஸ்லாமிய வெறுப்பையும் பொய் பிரச்சாரங்களையும் செய்ய முனையும் நபர்களுக்கு நீங்கள் சிம்ம சொப்பனமாக இருக்கிறீர்கள் என்றால் அது மிகையல்ல.
சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் சக்திகளை எதிர்க்க வேண்டும்.அவர்கள் அடையாளப்படுத்தபடவேண்டும் என்று நினைப்பவன் நான்.
சங்பரிவாரங்கள் வலைப்பதிவிலும் அவதூறுகளை பரப்பி வருவதை உங்களைப் போன்றவர்கள் தோலுரித்து காட்ட வேண்டும். திரு.அரவிந்தனின் பதிவுக்கு மிகச்சரியான எதிர் வாதம் வைத்துள்ளீர்கள். உங்களின் அறிவு மேலும் விசாலமடையவும், அதன் மூலம் என் போன்றவர்கள் பயனடையவும் தங்களை வாழ்த்துகிறேன்.

நன்றி!
உதயன்

Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் உதயன் அவர்களே!
உங்கள் மீதும் அவ்வாறே இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தானது. உங்களுடைய கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

சமூக நல்லிணக்கங்கள் நமது மக்களிடைய தழைத்தோங்க, உறுதிபட நமது முயற்சிகளும், உழைப்புகளும் உபயோகப்பட வேண்டும். நாம் அனைவர்களும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டிய கட்டாய காலத்தில் வழ்ந்து வருகிறோம்.

நன்றியும் வாழ்த்துக்களும்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

Shankaran er said...
This comment has been removed by the author.